18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் அருகே வேதாளை ஓட்டுநர் சங்க கிளை திறப்பு..

மண்டபம் அருகே வேதாளை ஓட்டுநர் சங்க கிளை திறப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 9:55 pm

இராமநாதபுரம் மாவட்ட சோஷியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் (எஸ்டிட்டியு ) சார்பில் மாவீரர் திப்பு சுல்தான் ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கம் வேதாளை கிளை திறப்பு விழா நடந்தது. கிளை தலைவர் இஸ்மத் ஜெமீல் தலைமை வகித்தார்.

வேதாளை அனைத்து ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தயூப் கான் வரவேற்றார். வேதாளை ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.எஸ்.லுத்துபுல்லாஹ் திறந்து வைத்தார். வேதாளை ஊராட்சி முன்னாள் தலைவர் நாகூர் கனி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலர் எம்.பீர் மைதீன், இணை செயலர் காதர் கனி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். வேதாளை கிளை துணை தலைவர் ஹனீப் அன்சாரி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!