18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மண்டபம் மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளின் அரிமானம் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

மண்டபம் மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளின் அரிமானம் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 7:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில்இந்திய தேசிய உலோக அரிமான குழுமம், காரைக்குடி சிக்ரி சார்பில் மீன்பிடி படகுகளின் உலோக அரிமானம் மற்றும் கடல் வாழ் உயிரினங்களின் ஒட்டுதல் தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

சிக்ரி தலைமை விஞ்ஞானி முனைவர் வி.சரஸ்வதி வரவேற்றார். பயிற்சி முகாமை சிக்ரி இயக்குநர் முனைவர் என்.கலைச்செல்வி துவக்க வைத்தார். அவர் பேசுகையில், நீலப் புரட்சியின் பாதுகாவலர்கள் மீனவர்களே. மீன்பிடி படகுகளில் நீண்ட காலமாக உயிரினங்களின் ஒட்டுதலை தடுக்கும் வர்ணம் பூசப்படுகிறது. தாமிரம், பாதரசம், துத்தநாகம் உள்ளிட்ட நச்சு வேதிப்பொருட்கள் கலந்த உயிர் கொல்லிகள் பயன்பட்டு வந்தது. இத்தகைய வேதிப்பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற் படுகிறது. அவைகளின் பயன்பாட்டை படிப்படியாக குறைத்து, முற்றிலும் தடை செய்யப்படுள்ளது. குறைந்த நச்சுத்தன்மை உள்ள உயிர் கொல்லிகளை உள்ளடக்கிய வண்ணப் பூச்சுகள் பயன்படுத்தப்படுகிறது. நச்சு தன்மையில்லா வண்ண பூச்சுகளை பயன்படுத்தி மீன்பிடி கலங்களை பாதுகாக்கலாம் என்றார். இந்திய கடலோரக் காவல் படை மண்டபம் ஸ்டேஷன் கமாண்டன்ட் எம்.வெங்கடேசன், கொல்கத்தா பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்தியா லிமிடெட் முதுநிலை மேலாளர் பொறியாளர் எஸ்.ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர். விஞ்ஞானி ஆர்.சி.பாரிக் நன்றி கூறினார்.

பயிற்சி நிறைவு மற்றும் பங்கேற்றோருக்கான சான்றிதழ் வழங்கும் விழாவிற்கு இந்திய தேசிய உலோக அரிமானக் குழும சேர்மன் சிக்ரி தலைமை விஞ்ஞானி வி.சரஸ்வதி வரவேற்றார். பயிற்சி முகாமின் நோக்கம், மீனவர்களுக்கு கற்றுக் கொடுத்த சாராம்சம் குறித்து மண்டபம் முகாம் சிக்ரி யூனிட் பொறுப்பு விஞ்ஞானி முனைவர் ஜி.சுப்ரமணியன் விளக்கினார். மத்திய கடல் மீன் ஆராய்ச்சி கூட மண்டபம் பிராந்திய மைய பொறுப்பு விஞ்ஞானி முனைவர் ஆர்.ஜெயகுமார் பயிற்சி நிறைவுரையாற்றினார். பயிற்சியாளர்களுக்கு மத்திய உப்பு மற்றும் கடல் ஆராய்ச்சி நிலைய மண்டபம் யூனிட் பொறுப்பு விஞ்ஞானி முனைவர் கே.ஈஸ்வரன் சான்றிதழ் வழங்கினார். மண்டபம் சிக்ரி யூனிட் மூத்த விஞ்ஞானி முனைவர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார்.

பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்தியா லிமிடெட் பொது மேலாளர் ராய் மேத்யூஸ், சந்தை மேலாளர் சஞ்சீவ் நந்தி, மற்றும் மீனவர்கள் கலந்து கொண்ட னர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!