17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா..

இராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் மகளிர் தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 6:10 pm

இராமநாதபுரம் மாவட்ட சட்டப் பகள் ஆணைக்குழு, முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி முதல்வர்  முனைவர் எஸ்.சோமசுந்தரம் வரவேற்றார். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர், முதுநிலை உரிமையியல் நீதிபதி வ.ராமலிங்கம் அறிமுகவுரை பேசினார். பெண்ணுரிமை சட்டங்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு கருத்தரங்கம் நடைபெற்றது.  முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவர்  அ.கயல்விழி துவக்கி வைத்தார்.

மாவட்ட நீதிபதி, நிரந்தர மக்கள்  நீதி மன்றம் தலைவர் பி.ஆர்.ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் வழக்கறிஞர் சங்க தலைவர்  ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, வழக்கறிஞர் சங்க செயலாளர் ஏ.ஆர். நம்புநாயகம், மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் எஸ். துரைமுருகன், ஆகியோர்   பேசினர்.  மகளிர் நீதிமன்ற அரசு வழக்கறிஞர் என்.மனோரஞ்சிதம், வழக்கறிஞர்கள்  எம்.ராஜேஸ்வரி, செ.சந்திரலேகா ஆகியோர் சட்ட கருத்துரை  வழங்கினர். துணை பேராசிரியை எம். மவ்ரீன் கோமஸ் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!