17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உச்சிப்புளியில் முதியவர் கொலை..

உச்சிப்புளியில் முதியவர் கொலை..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 6:06 pm

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ரயில்வே கேட் அருகே தென்னந்தோப்பு உள்ளது. இங்கு ராமநாதபுரம் அண்ணா நகர் பஞ்சவர்ணம் மகன் முத்து (58) வசித்தார். இவரது மகன்கள் ராமநாதபுரத்தில் வசிக்கின்றனர்.

இந்நிலையில் அவர் இன்று (08.3.19) மாலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் தீக்காயங்களுடன் தலைகுப்புற கிடந்ததால் திட்டமிடப்பட்ட கொலையாக இருக்கலாம் என உச்சிப்புளி போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சொத்து தகராறில் எரித்து கொல்லப்பட்டரா? அல்லது வேறு காரணங்களுக்காக மர்ம நபர்களால் கொல்லப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் ஆகியோர் விசாரித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!