18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒகேனக்கல் குடிநீர் கடந்த 10 நாட்களாக வராததால் பக்கத்துக் கிராமங்களில் குடிநீர் எடுத்துச் செல்லும் அவல நிலை..

ஒகேனக்கல் குடிநீர் கடந்த 10 நாட்களாக வராததால் பக்கத்துக் கிராமங்களில் குடிநீர் எடுத்துச் செல்லும் அவல நிலை..

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 1:23 am

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பூகனஅள்ளி ஊராட்சி பனங்கள்ளி கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளது பள்ளிக்கு கல்லூரிக்கு தினந்தோறும் செல்லும் மாணவ மாணவிகள் உள்ளனர்.

பனங்கள்ளி கிராமத்தில் ஒரு மினி டேங்க் இரண்டு கைபம்ப் உள்ளது. இந்த முன்று பழுதடைந்து இரண்டு வருடங்கள் ஆனது. இதில் ஒரு கைபம்ப் மட்டும் செயல்பட்டு வருகிறது. இதுபோக ஒகேனக்கல் குடிநீர் தினந்தோறும் போதுமான அளவு கிராமத்திற்கு வந்துள்ளது.

கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் கிராமத்திற்கு வரவில்லை சுற்றியுள்ள கிராமங்களில் எரப்பட்டி. பொம்பரசம்பட்டி.நக்கல்பட்டி. இந்த கிராமங்களுக்குச் சென்று குடிநீர் எடுத்து வந்துள்ளனர். சில  தினம் பக்கத்து ஊரில் காலையில் சென்று ஒகேனக்கல் குடிநீர் பிடிக்கும்போது அந்த கிராம மக்கள் குடிநீர் பிடிக்க மறுத்துவிட்டனர், மீறி எங்கள் ஊரில் தண்ணீர் பிடிக்க வந்தால் இரண்டு ஊருக்கும் சண்டை வரும் என்று மிரட்டி உள்ளனர்.

ஆத்திரமடைந்த பனங்கள்ளி கிராம மக்கள் நேரடியாக சென்னை சேவை மையம் அலுவலத்திற்கு கைபேசி மூலம் எங்கள் ஊரில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வருவதில்லை என்று தகவல்கொடுத்துள்ளனர். பின் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் பனங்கள்ளி கிராமமக்கள் ஒருவரிடம் கைபேசிக்கு அழைத்து உங்க ஊரில் என்ன பிரச்சனை என்று கேட்டார். கிராம மக்கள் எங்கள் ஊரில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை கைபம்ப் எதுவும் இல்லை பழுதடைந்துவிட்டது. மினி டேங்க் சரி செய்யவில்லை. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கடந்த 10 நாட்களாக வரவில்லை. நாங்கள் குடிப்பதற்கு என்ன செய்வது என்றனர். எங்க ஊர் கிராம மக்கள் அனைவரும் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகம் வருகிறோம் எங்களுக்குத் ஒகேனக்கல் குடிநீர் வேண்டும் என்றனர் வட்டார வளர்ச்சி அலுவலர் நீங்கள் யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம் நானே உங்கள் கிராமத்திற்கு வருகிறேன் என்றார் ஆனால் பஞ்சாயத்து கிளார்க் குழந்தைசாமி மட்டும் வந்தார் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இன்று மதியம் உங்கள் ஊர் ஒகேனக்கல் குடிநீர் வரும் என்றார். இந்தப் பேச்சுவார்த்தையில் கிராம மக்களுக்கு எந்த பயனும் இல்லாததால் காலிகுடங்களுடன் முற்றுகையில் ஈடுபட்டனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் கவனத்திற் கொண்டு எங்கள் ஊருக்கு ஒகேனக்கல் குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சாலை மறியல் செய்வதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!