17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » முறையாக குடிநீர் வழங்கக்கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை…

முறையாக குடிநீர் வழங்கக்கோரி உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை…

எழுதியவர்: ஆசிரியர் March 8, 2019, 1:16 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கல்லூத்துப் பஞ்சாயத்தைச் சேர்ந்தது கல்யாணிபட்டி கிராமம்.இக்கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகம் இல்லை.கிராமமக்கள் உப்புத்தண்ணீரை பயன்படுத்தி வந்த மோட்டார் பழுதானதால் கடந்த 15 நாட்களாக உப்புத்தண்ணீர் விநியோகமும் பாதிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை மனுக் கொடுத்தும் பதில் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!