17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரத்திற்கு பைபர் படகில் வந்த இலங்கையர் இருவர் சிக்கினர்..

இராமேஸ்வரத்திற்கு பைபர் படகில் வந்த இலங்கையர் இருவர் சிக்கினர்..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 10:22 pm

இராமேஸ்வரம், மண்டபம், வேதாளை, உச்சிப்புளி உள்ளிட்ட கடல் பகுதிகள் வழியாக கஞ்சா, பீடி இலைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தல் முயற்சி கடந்த இரு வாரங்களாக அதிகரித்துள்ளது. 3.5 டன் பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் ராமேஸ்வரம் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ராமேஸ்வரம் கியூ பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவல் படி, சேரான்கோட்டை கடன்பகுதியில் இன்றிரவு 8: 00 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு வந்த ஒஎப்ஆர்பி ஏ 5718 பிடிஎம் என்ற பிளாஸ்டிக் பைபர் படகை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், இலங்கை மன்னார் மாவட்டம் பேசாளை பகுதியைச் சேர்ந்த பரூக் மகன் சியோன் 34 சுனந்த பால மகன் யோகராஜ், 39 என தெரிந்தது.

படகில் ஏற்றி வந்த  25 லிட்டர் டீசல், ஜிபிஎஸ் சாதனம், 2 செல் போண் மற்றும் மீன்பிடி வலைகளை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்து விசாரித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள உறவினர்களை சட்ட விரோதமாக அழைத்துச் செல்ல வந்ததாக தெரிந்தது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!