17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை பாடி பகுதியில் இரவு நேரங்களில் திருடர்களின் அட்டகாசம்…

சென்னை பாடி பகுதியில் இரவு நேரங்களில் திருடர்களின் அட்டகாசம்…

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 10:15 pm

சென்னை அம்பத்தூர் பாடியில் சிவன் கோவில் அருகில் உள்ள நம்பர் 14 ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவில் 7/3/2019 அன்று அதிகாலை 2.30 மணிக்கு மேல் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் இருந்த சீட்டை வண்டி சாவியே இல்லாமல் லாபகமாக திருடி செல்லும் காட்சி cctv கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த திருடர்கள் சீட்டை திருடும் விதத்தை பார்த்தால் இவர்கள் வண்டி திருடுவதில் பலே கில்லாடியாக தான் இருக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். திருட்டில் ஈடுபட்ட இருவரும் APACHE இருசக்கர வாகனத்தில் வந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு வாகனத்தின் சீட்டை திருடி சென்ற காட்சி இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்:- அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!