17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தீவு மணல் திட்டில் கேட்பாரற்று கிடந்த 900 கிலோ பீடி இலை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல்..

தீவு மணல் திட்டில் கேட்பாரற்று கிடந்த 900 கிலோ பீடி இலை இந்திய கடலோரக் காவல் படை பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 8:34 pm

ஹோவர் கிராப்ட் எச் -190ல் இந்திய கடலோரக் காவல் படை வீரர்கள் தென் கடல் பகுதியில் இன்று நண்பகல் 11:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது 3 ஆம் திட்டு பகுதியில் பாலித்தின் பண்டல்கள் கேட்பராற்று கிடந்தன. அதை கைப்பற்றிய வீரர்கள் பண்டல்களை பிரித்து பார்த்தனர். அதில் பீடி இலைகள் என தெரிந்தது. தைப்பற்றிய 900 கிலோ பீடி பண்டல்களை, ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளிடம் மதியம் 2 :45 மணியவில் ஒப்படைத்தனர்.

இதன் மதிப்பு ரூ.9 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த இரு வாரங்களில் இலங்கைக்கு கடத்த முயன்ற 3 ,500 கிலோ பீடி இலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ​

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!