மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ரவுடி குமரன் என்ற தீனா குமார் என்பவரை நேற்று முன்தினம் மாலை மர்ம கும்பல் ஒன்று ஊமச்சிகுளம் அருகே கொடூரமாக
வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் முன்விரோதம் காரணமாகவே இந்த கொலையானது நடந்துள்ளது தெரியவந்தது,
மதுரையைச் சேர்ந்த பிரேம்குமார், பெரியண்ணா குமார், சரவணகுமார், முத்துக்குமார், அருண்குமார், கார்த்திக்,திருமுருகன் ஆகிய 7 பேர் மதுரை மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி உமா அவர்கள் முன்னிலையில் சரணடைந்தனர்.
செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.