17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » முதுகுளத்தூரில் இரவில் சீட்டாட்டம் 9 பேர் கைது ரூ.23 ஆயிரம் பறிமுதல்..

முதுகுளத்தூரில் இரவில் சீட்டாட்டம் 9 பேர் கைது ரூ.23 ஆயிரம் பறிமுதல்..

எழுதியவர்: ஆசிரியர் March 7, 2019, 1:02 pm

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் போலீஸ் சார்பு ஆய்வாளர் கோடீஸ்வரன் தலைமையில் போலீசார் நேற்றிரவு ரோந்து சென்றனர். அங்குள்ள குளக்கரை மற்றும் பள்ளிக்கூடம் அருகே சீட்டாடிய கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில், முதுகுளத்தூர் தனசேகரன் 35, முனியசாமி 70, ஏனாதி பாலமுருகன் 36, வடக்கூர் நெப்போலியன் 49,  கிடத்திருக்கை வெற்றி வேல் 46, புளியங்குடி பாலுசாமி 48, தமிழ் செல்வன் 41, முதுகுளத்தூர்  வெள்ளைத்துரை 39, சேகர் 52 ஆகியோர் பணம் வைத்து சீட்டாடியது தெரிந்தது.

இரு குழுக்களாக சீட்டாடிய இவர்களிடமிருந்து ரூ.23 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 9 பேரும் காவல் நிலைய நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!