18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்வயர் உரசியதில் தீப்பிடித்தது.தீயணைப்பு வண்டியில் தண்ணீர் இல்லததால் தீயை அணைப்பதில் தாமதம்..

உசிலம்பட்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்வயர் உரசியதில் தீப்பிடித்தது.தீயணைப்பு வண்டியில் தண்ணீர் இல்லததால் தீயை அணைப்பதில் தாமதம்..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 11:58 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வடக்கம்பட்டியிலிருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி உசிலம்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த டிரைவர் பாண்டி என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.வண்டி உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் விலக்கில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சாலை ஓரத்திலிருந்த மின்வயர் உரசியதில் வைக்கோல் தீப்பிடித்து எரிந்தது.உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

உசிலம்பட்டி தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைக்க முற்பட்டனர்.ஆனால் வண்டியிலிருந்த தண்ணீர் தீர்ந்ததால் தீயை அணைக்க முடியவில்லை.பின்னர் ஜெசிபி இயந்திரம் முழுவதும் மூலம் வண்டியிலிருந்த வைக்கோல் அகற்றப்பட்டது.பின் தனியார் லாரி வண்டி தண்ணீர் மூலம் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!