18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகள் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

மாற்றுத்திறனாளிகள் பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 11:31 pm

ஊனத்தை சொல்லி அரசியல் நையாண்டி செய்து மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்திய பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் இன்று (06.03.19) மாலை நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமை வகித்தார். ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி மற்றும் நத்தம் ஒன்றிய செயலாளர் முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங் கண்டன உரையாற்றினார். நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் பஞ்சு நன்றியுரை கூறினார். இப்போராட்டத்தில் 140 மாற்றுத்திறனாளிகளும் அவர்களது பாதுகாவலர்களும் பங்கேற்றனர்.

கீழை நியூஸுக்காக..

திண்டுக்கல் மாவட்ட ஒளிப்பதிவாளர் அழகர்சாமி..

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!