18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி உற்சவம்..

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் சுவாமி அம்பாள் தீர்த்தவாரி உற்சவம்..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 9:41 pm

மாசி அமாவாசையையொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி தங்க ரிஷப வாகனத்தில் கோயிலில் இருந்து புறப்பட்டு அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அதன்பின் சுவாமி அம்பாள் அக்னி தீர்த்தம் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் பக்தர்களுக்கு அருள்புரிந்தார்.

தீர்த்தவாரியின் போது அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடினர். இதையடுத்து அக்னி தீர்த்த மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று நான்கு ரத வீதிகளில் வீதிஉலா சென்று சுவாமி அம்பாள் கோயிலை அடைந்தனர் .நான்கு ரத வீதியில் வந்த சுவாமி அம்பாளை பெருந்திரளான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!