17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » திருப்புல்லாணி அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதி பெண்ணின் கால் முறிவு..

திருப்புல்லாணி அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதி பெண்ணின் கால் முறிவு..

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 8:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியைச் சேர்ந்த இருளாண்டி மனைவி லட்சுமி, 60.இவர் திருப்புல்லாணி நகரியில் லாரியில் தண்ணீர் பிடித்து கொண்டு வீடு திரும்பினார். அப்போது தினைக்குளம் பகுதியை சேர்ந்த தண்ணீர் டேங்கர் லாரி மோதி லட்சுமி விபத்துக்குள்ளானார்.

இதில் லட்சுமியின் இடது கால் முறிந்தது. இதையடுத்து 108 ஆம்புலன்சில் இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்பு கால் துண்டிக்கும் நிலையில் அரசு மருத்துவ மனையில் போதிய வசதிகள் இல்லாததால் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து திருப்புல்லாணி காவல் சார்பு ஆய்வாளர் முத்துக்குமார் வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுநர், லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!