17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் வர்த்தக சங்கத்தலைவர் உள்பட 3 பேர் கைது…

உசிலம்பட்டியில் குடும்ப தகராறில் வர்த்தக சங்கத்தலைவர் உள்பட 3 பேர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் March 6, 2019, 3:15 pm

உசிலம்பட்டியில் வர்த்தக சங்க தலைவர் ஜவகர் கைது உசிலம்பட்டி கீழப் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வர்த்தக சங்க தலைவர் ஜவஹர் இவருக்கும் இவருடைய உறவினர் பாண்டியராஜன் ஆகியோர் ஒரே தெருவில் குடியிருந்து வருகிறார்கள். பாண்டியராஜன் ஜவகர் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. அச்சமயம் ஜவஹருடைய மகன் வினோபா கௌதம் தங்களுடைய உறவினர் பாண்டியராஜனை தலையில் தாக்கியதாகவும், இவர் பலத்த காயமடைந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது சம்பந்தமாக பாண்டியராஜன் நகர காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் ஜவகர் மற்றும் அவருடைய மகன்கள் வினோபா கௌதம் ஆகியோரை கைது செய்து உசிலம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!