17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தர்பூசணிசாறு,எலுமிச்சம் பழச்சாறு , நீர்,மோர், ஆகிய குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியை S.P. முரளி ரம்பா தொடங்கி வைத்தார்..

கோடை காலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவலர்களுக்கு தர்பூசணிசாறு,எலுமிச்சம் பழச்சாறு , நீர்,மோர், ஆகிய குளிர்பானங்கள் வழங்கும் நிகழ்ச்சியை S.P. முரளி ரம்பா தொடங்கி வைத்தார்..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 4:42 pm

குளிர் காலம் முடிந்து கோடை வெயில் வறுத்தெடுக் ஆரம்பித்துள்ளது, தமிழகத்தின் பல மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வெயில் கொளுத்தும் காலங்களில் ஒரு நிமிடம் சிக்னலில் நின்றாலே மக்கள் மயக்கமடையும் நிலைக்கு போகும் சூழலில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நாள் முழுக்க வெயிலில் நின்று பணியாற்றும் காவலர்களுக்கு தூத்துக்குடி மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர், ஆகிய போக்குவரத்து காவலர்களுக்கு தாகம் தீர்க்கவும், நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் தடுக்கவும், கோடை காலம் முழுவதும் தர்பூசணிசாறு,எலுமிச்சம் பழச்சாறு நீர்,மோர் வழங்க மாவட்ட S.P. முரளி ரம்பா உத்தரவின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று காலை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா போக்குவரத்து காவலர்களுக்கு தர்பூசணிசாறு,எலுமிச்சம் பழச்சாறு நீர்,மோர், வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்து காவலர்களுக்கு பழச்சாறு, நீர் மோர் வழங்கினார். நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன், தென் பாகம் காவல் ஆய்வாளர் தீன் குமார், அனைத்துமகளிர் காவல் ஆய்வாளர் முத்துலட்சுமி,போக்குவரத்துபிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!