17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலி ..

நிலக்கோட்டையில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த விவசாயி பலி ..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 1:09 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ராஜா ராணி கோட்டையைச் சேர்ந்த வீரணன் மகன் பழனிச்சாமி வயது 50 விவசாயி ஆவார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த வேலைக்காக மொபட்டில் வந்து கொண்டிருந்தபோது மதுரை ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே தானாக நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயமடைந்த பழனி பழனிச்சாமியை உடனடியாக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மதுரை அழைத்து செல்லப்பட்டார், இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பழனிச்சாமி இறந்தார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் அவரது மகன் அசோக்குமார் வயது 24 என்பவர் கொடுத்த புகாரின் படி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேன்மொழி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!