18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதல் 2 பேர் உயிரிழப்பு..

இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதல் 2 பேர் உயிரிழப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 5, 2019, 9:34 am

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் பகுதியில் காரை முந்த முயன்ற சரக்கு வாகனம், வேன் மீது மோதியதில் டிரைவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

பல்லடம் பகுதியைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 14 பேர் இராமேஸ்வரம் வந்து விட்டு வேனில் ஊருக்கு திரும்பிச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே அரியமான் பகுதியில் இன்று காலை 4:30 மணியளவில் சென்ற போது மீன் ஏற்றிக் கொண்டு பின்னால் வந்த சரக்கு வாகனம் முன்னால் சென்ற காரை முந்த முயன்ற போது கார் மீது மோதியதில் அதனருகே சென்ற பல்லடம் வேன் மீது மோதி நின்றது. இந்த இடிபாடுகளில் சிக்கிய பல்லடம் சொக்கம்பாளையம் பொன்னையா மகன் மிகுனகுமார் 37, பாம்பன் உமர் அலி 46 ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இந்த விபத்தில் பல்லடம் சின்னச்சாமி 70, முருகன் 53, லதா 45, கார்த்தி 29, கோவை சூலூர் விக்னேஸ்வரன் 25, சாயல்குடி அருகே கன்னி ராஜபுரம் செல்வகுமார் 25 ஆகியோர் காயமடைந்தனர்.

காயமடைந்தோர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ், தனியார் அவசர உதவி வாகனம் மூலம் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். லேசான காயமடைந்த 3 பேர் ராமநாதபுரம், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த 4 பேர் முதலுதவிக்கு பிறகு கோவை கொண்டு செல்லப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து உச்சிப்புளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!