17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிருதுமால் நதியில் வீசி, சிசுவை கொலைசெய்த வழக்கில், சிசுவின் பாட்டி கைது…

கிருதுமால் நதியில் வீசி, சிசுவை கொலைசெய்த வழக்கில், சிசுவின் பாட்டி கைது…

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 8:20 pm

கடந்த 28.02.2019 ம் தேதி வடக்கு வட்டம், மதுரை, வடக்கு கிராம நிர்வாக அலுவலர் திரு.ஜெகதீஸ் என்பவர் D2-செல்லூர் காவல் நிலையத்தில் மதுரை டவுண் செல்லூர் மீனாட்சி கல்லூரி அருகே உள்ள கிருதுமால் நதியில் பிறந்து சில தினங்களே ஆன ஆண் குழந்தை இறந்து கிடப்பதாக கொடுத்த புகார் வந்தது.

அதன் அடிப்படையில் வழக்கு பதிவுசெய்து, புலன்விசாரணை மேற்கொண்டதில் செல்லூர் மேலத்தோப்பை சேர்ந்த 17 வயது சிறுமிதான் மேற்படி குழந்தைக்கு தாய் என தெரியவந்தது. சிறுமியை விசாரணை செய்தபோது, தென்காசியில் முறுக்கு கடையில் வேலை பார்த்தபோது, உடன் வேலைபார்த்த தொண்டைமான் புதுக்கோட்டை, கீழத்தெரு, சோத்துபாளையத்தை சேர்ந்த ராசு மகன் வீரமணி 19/19, என்பவர் தன்னை ஆசை வார்த்தை கூறி, கற்பமாக்கி ஏமாற்றியதாகவும், கடந்த 24.02.2019 அன்று மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தனக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், பின்னர் 27.02.2019ம் தேதி தனது தாயார் மகேஸ்வரியின் தாய், தான் மறுத்தும், கேட்காமல், மருத்துவமையில் இருந்து வீட்டிற்கு செல்லும்போது, கட்டை பையில் குழந்தையை வைத்து, அதை கிருதுமால் நதியில் தூக்கி எறிந்துவிட்டதாகவும் எனவும் விசாரணையில் தெரிவித்தார்.

எனவே சிசுவை கிருதுமால் நதியில் வீசி கொலை செய்த சிசுவின் பாட்டி மகேஸ்வரியை நேற்று கைதுசெய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. இன்று வீரமணியை POCSO சட்டத்தின் கீழ் D2-செல்லூர் ச&ஒ காவல்நிலைய ஆய்வாளர் திரு.கோட்டைசாமி கைதுசெய்தார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!