18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : உடனடி நடவடிக்கையால் பரமக்குடி பெண்ணுக்கு தையல் இயந்திரம் ..

இராமநாதபுரம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் : உடனடி நடவடிக்கையால் பரமக்குடி பெண்ணுக்கு தையல் இயந்திரம் ..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 7:29 pm

இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவ ராவ் தலைமையில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம்  நடைபெற்றது.  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தலா ரூ.74,500 வீதம் 19 பயனாளிகளுக்கு ரூ.14,15,500 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளை ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரம்வே ண்டி கோரிக்கை மனு வழங்கிய பரமக்குடி கோகிலா என்பவருக்கு உடனடி நடவடிக்கையால், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் விலையில்லா தையல் இயந்திரத்தை  வழங்கினார். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்க  பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சித் தலைவர்  நேரடியாகச் சென்று கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

இக்கூட்டத்தில் கோரிக்கை  மனுக்களை வழங்கிய அனைத்து நபர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் உணவு  பொட்டலங்களை வழங்கினார்.  மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சி.தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!