17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5.50 கோடி மதிப்பில் எம்ஆர் ஐ ஸ்கேன் சேவை பிரிவு துவக்கம்..

இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.5.50 கோடி மதிப்பில் எம்ஆர் ஐ ஸ்கேன் சேவை பிரிவு துவக்கம்..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 7:19 pm

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் ரூ.5.50 கோடி மதிப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காந்த அதிர்வலை வரைவு வசதியை தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமை வகித்தார். அமைச்சர் மணிகண்டன் பேசியதாவது: ராமநாதபுரம்  மாவட்டத்தில் ஏழ்மை நிலை மக்கள் கட்டணமின்றி தரமான மருத்துவ வசதி பெற்று வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  ரூ.5.50 கோடி மதிப்பில் காந்த அதிர்வலை வரை வலை ஸ்கேன் நவீன இயந்திரம்  மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இக்கருவியானது எனது முழு முயற்சியால்  தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ரூ.20 கோடி  மதிப்பில் தாய்-சேய் நல பிரிவு புதிய கட்டடகட்டுமானப் பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. இம்மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக வருகை தரும் மக்கள் நலனுக்காக 10 வெண்டிலேடர் கருவிகள் , டயலாசிஸ்  கருவிகள், தரம் உயர்த்தப்பட்ட ரத்த வங்கி, பச்சிளம் குழந்தைகளின் நலனுக்காக  தாய்ப்பால் வங்கி போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளது என பேசினார்.

இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.சகாயஸ்டீபன்ராஜ், மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பி.கே.ஜவஹர்லால்,  முதன்மை மருத்துவர் மரு.ஞானகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!