17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிருஷ்ணகிரியில் ஆடுமேய்த்தவரை தூக்கி வீசி யானை அட்டகாசம்..

கிருஷ்ணகிரியில் ஆடுமேய்த்தவரை தூக்கி வீசி யானை அட்டகாசம்..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 3:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் உரிகம் என்ற மலை கிராமம் உள்ளது. உரிகம் அடுத்த முத்திகரையைச் சேர்ந்த மாதப்பா மகன் தப்பகுளியப்பா என்பவரை 03.03.19 மாலை 4 மணியளவில் உரிகம் காட்டில் ஆடுகள் மேய்க்கும் போது, அங்கு யானைகள் வருவதை பார்த்து ஓடி உள்ளார்.

அதற்குள் ஒரு யானைத் துரத்தி வந்து தப்பகுளியப்பாவை தூக்கி வீசி உள்ளது. பலத்த காயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர் மீட்டு, உரிகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

பிறகு அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் பலத்த காயம் என்பதால் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தலைமை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். சிறிது நேரம் உரிகம் கிராமத்தில் பரப்பரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!