17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » இராமநாதபுரம் அமமுக., எஸ்டிபிஐ., நிர்வாகிகள் சந்திப்பு..

இராமநாதபுரம் அமமுக., எஸ்டிபிஐ., நிர்வாகிகள் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 3:17 pm

வரும் லோக் சபா தேர்தலில் அமமுக., எஸ்டிபிஐ., கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்து தொடர்ந்து  தமிழகம் முழுவதும் அமமுக., எஸ்டிபிஐ ., நிர்வாகிகள் சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

இதன்படி, இராமநாதபுரம் அமமுக., மாவட்ட செயலாளர் வ து ஆனந்த், ஒன்றிய செயலர்கள் முத்தீஸ்வரன் (ராமநாதபுரம்), ஸ்டாலின் ஜெயச்சந்திரன் ( மண்டபம்), எஸ்டிபிஐ, தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாவட்ட தலைவர்கள் நூர்ஜியாவுதீன் (மேற்கு), அப்துல் வஹாப் (கிழக்கு), மாவட்ட பொதுச் செயலர்கள் இஷாக் (மேற்கு), செய்யது இபுராஹீம் (கிழக்கு), மாவட்ட துணைத் தலைவர்கள் சோமு, சுலைமான், செயலர்கள் ஹமீது இபுராஹீம், அஸ்கர், பைரோஸ் கான், பொருளாளர்கள் அலி முத்து, ரபீக், நகர் தலைவர் அஜ்மல் ஷரீப், செயலர் ஜகுபர், தொழிற் சங்கத் தலைவர் முஸ்தாக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அமமுக., மாவட்ட செயலாளர் வ.து.ந ஆனந்த், அமமுக கூறுகையில், “எவ்வாறு அமமுக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ளதோ, அதுபோல் எஸ்டிபிஐ ., கட்சியும் இளைஞர் பட்டாள கட்டமைப்புடன் உள்ளது. SDPI உடன் இணைந்து துடிப்புடன் தேர்தல் பணியாற்றி வெற்றிக்கனியை துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் பரிசளிப்போம்”  என்றார்.  அதே போல் SDPI தமிழ் மாநில பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது பேசுகையில், “இந்த கூட்டணி வெற்றிக்கு முழு ஒத்துழைப்புடன் தேர்தல் பணியாற்றுவோம்” என்றார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!