தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆட்டோ மீது பஸ் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பலி ஆக்கியுள்ளனர். அல்லிநகரம் தீயனைப்பு நிலையம் பின்புறம் உள்ள தெருவை சேர்ந்த சந்தோஷ், சுதா, மணிகண்டன், அபிராமி ஆகிய நான்கு பேரும் ஆண்டிபட்டி அருகே கனவா மலைப் பகுதி உள்ள பூச்சிபட்டி கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது ஆண்டிபட்டி VBL தியேட்டர் அருகில் எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியதில் ஆட்டோவில் இருந்த நான்கு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர். நான்கு பேரின் உடலும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி வி.காளமேகம்




You must be logged in to post a comment.