17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்த வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் March 4, 2019, 12:11 pm

மதுரை, முனிச்சாலை, கக்கன் காலனியை சேர்ந்த சென்ராஜ் என்பவருடைய மகனாகிய பிரகாஷ், 20/2019 என்பவரும் மற்றும் மதுரை, முனிச்சாலை, இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவருடைய மகன் ஆறுமுகம் என்ற அலார்ட் ஆறுமுகம் என்ற அஜித்குமார், 20/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் பணியிலிருந்த காவல் அதிகாரிகளை கொலை முயற்சி செய்துள்ளனர்.

இவர்கள் மீது இவ்வழக்கு உட்பட கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,.  உத்தரவுப்படி நேற்று (03.03.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!