17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாநில அளவிலான பேச்சு போட்டி ராமநாதபுரம் யூத் ரெட் கிராஸ் மாணாக்கர்களுக்கு பரிசு..

மாநில அளவிலான பேச்சு போட்டி ராமநாதபுரம் யூத் ரெட் கிராஸ் மாணாக்கர்களுக்கு பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 10:46 pm

யூத் ரெட் கிராஸ் தன்னார்வலர்களுக்கான மாநில அளவிலான பேச்சு (தமிழ்/ஆங்கிலம்) போட்டி சென்னை ரெட் கிராஸ் சொசைட்டி தலைமையகத்தில் இன்று (02.3.2019) நடைபெற்றது. இன்றைய மனித நேயத்தின் மதிப்பு என்ற தலைப்பில் நடந்த இப்போட்டியில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி பி.எஸ்சி (சைகாலஜி) 3 ஆம் ஆண்டு மாணவி நிரோஷா அப்துல் மாலிக் (ஆங்கிலம்), ராமநாதபுரம் அண்ணா பல்கலை., பொறியியல் உறுப்பு கல்லூரி பி.இ (மெக்கானிக்) 3 ஆம் ஆண்டு மாணவர் ஜெ. முத்துகுமரன் (தமிழ்) ஆகியோர் மூன்றாம் பரிசு வென்றனர்.

பரிசு வென்று ராமநாதபுரம் யூத் ரெட் கிராஸ் அமைப்பிற்கு பெருமை சேர்த்த மாணவி நிரோஷா அப்துல் மாலிக், மாணவர் முத்து குமரன் ஆகியோரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலர் எம்.ராக் லாண்ட் மதுரம், யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் காரைக்குடி அழகப்பா பல்கலை.,முனைவர் ஜி.விநாயக மூர்த்தி, யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர்  பேராசிரியர் ஆ.வள்ளி விநாயகம் மாவட்ட இணைஅமைப்பாளர் ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஏ.ஆனந்த், கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி திட்ட அலுவலர் எம். ஸ்ரீமதி, அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரி திட்ட அலுவலர் முனைவர் எஸ்.சோலையப்பன் ஆகியோர் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!