18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » பரமக்குடியில் ரத்த தான முகாம்..

பரமக்குடியில் ரத்த தான முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 7:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அழகப்பா பல்கலை., உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் என். ஞான திரவியம் தலைமையில் ரெட் கிராஸ் சேர்மன் எஸ். ஹாரூன் முகாமை துவக்கி வைத்தார். யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் ஆர். பக்தவச்சலம் வரவேற்றார்.

ரெட் கிராஸ் ரத்த தான முகாம் மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் எஸ். அய்யப்பன் ரத்த தான அவசியம் குறித்து பேசினார். நயினார் கோவில் வட்டார மருத்துவ அலுவலர் எம். சுந்தரம் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மாணவ மாணவியர் 54 பேரிடம் ரத்தம் சேகரித்தனர்.

ரெட் கிராஸ் மாவட்ட செயலாளர் எம். ராக்லாண்ட் மதுரம் ரத்த தானம் செய்தோரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கணித பேராசிரியர் எஸ். முஹம்மது அபூபக்கர் நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் வேல்முருகன், கோ. உலகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!