18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நாகைமாவட்டம் தரங்கம்பாடியில் பாஜகவினர் இரு சக்கர வாகனப் பேரணி…

மத்திய அரசின் சாதனைகளை விளக்கி நாகைமாவட்டம் தரங்கம்பாடியில் பாஜகவினர் இரு சக்கர வாகனப் பேரணி…

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 7:04 pm

மத்திய அரசின் 5 ஆண்டுகால சாதனைகளை விளக்கி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு விதமான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியின் நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட செயலாளரும், அக்கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதி அமைப்பாளருமான அமிர்த .விஜயகுமார் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் இருசக்கர வாகன பேரணி மற்றும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் .

தரங்கம்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இருசக்கர வாகன பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்தில் முடிவடைந்தது. இதில் செம்பனார்கோவில் ஒன்றிய தலைவர் பாலாஜி குழுக்கள் ,குத்தாலம் ஒன்றிய தலைவர் ஜெயவர்த்தனன் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் கோட்ட பொறுப்பாளர் வரதராஜன் மத்திய அரசின் 4 ஆண்டு கால சாதனைகளை விளக்கி சிறப்புரை நிகழ்த்தினார்.

செய்தி வி.காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!