18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி தொடங்கியது..

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இரண்டு நாள் புத்தக கண்காட்சி தொடங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 5:03 pm

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று 2.03.2019 மாணவர்களுக்கான இரண்டு நாள்  புத்தக கண்காட்சி தொடங்கப்பட்டது , இராமநாதபுரம் அருணா ஸ்டோர் இணைந்து நடத்தும் இந்த புத்தக கண்காட்சியை இஸ்லாமியா கல்வி நிறுவங்களின் தாளாளர் எம்எம்கே முகைதீன் இப்ராஹிம் துவக்கி வைத்தார்.

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில், மாணவர்களுக்கு தேவையான பொது அறிவு நூல்கள், சிறுவர்களுக்கான கதை புத்தகங்கள்,படம் வரைதல், போட்டி தேர்வுகள் வழிகாட்டி.மற்றும் பெண்களுக்கு தேவையான வீட்டு குறிப்புகள்   போன்ற எண்ணற்ற புத்தகங்கள் இடம்பெற்றன, ஏராளமான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பார்த்து பயன்பெற்றனர், மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 15  சதவீதம் தள்ளுபடி விலையில் புத்தகங்கள் வழங்கப்பட்டது,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!