18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா..

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா..

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 4:48 pm

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வாரியத்தோ்வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் அதிக தோ்வு விழுக்காடு கொடுத்து சிறப்பாக பணியாற்றிய ஆசரியர்களு விருது வழங்கும் விழா டாக்டர் தஸ்தகிர் அரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரியின் தலைவர் எஸ்.எம்.யுசுஃப் சாகிப் தலையுரையாற்றினார். முதல்வர் பேராசிரியர் அ.அலாவுதீன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் துணை முதல்வர் என்.இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். இ்ந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இதயம் நிறுவன அதிபர் வி.ஆர் முத்து கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் மாணவர்கள்கு பரிசுகளும், சன்றிதழ்களும், கேடயங்களும் வழங்கினார். பாடங்களில் அதிக விழுக்காடு எடுத்து சாதனை புரிந்து ஆசிரியர்களை பாராட்டி கேடயமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி, முகம்மது சதக் பொறியியல் கல்லூரி டீன் ஏ.முகம்மது சகுபர், முதல்வர் ஜெ.அப்பாஸ் முகைதீன் மற்றும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இ.ரஜபுதீன் ஆகியோர் வாழத்துரை வழங்கினர்.

இவ்விழாவில் விருது பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரையும் சதக் அறக்கட்டளை நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்து தொிவித்தனர். இந்நிகழ்வின் இறுதியில் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளருமான திரு. அ.சேக்தாவுது நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!