17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » 12வது அகில இந்திய குங்ஃபூ (கராத்தே) முஹம்மது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை…

12வது அகில இந்திய குங்ஃபூ (கராத்தே) முஹம்மது தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவர்கள் சாதனை…

எழுதியவர்: ஆசிரியர் March 2, 2019, 1:10 pm

ஓசூரில் நடைபெற்ற 12வது அகில இந்தியகுங்ஃபூ (ராத்தே) போட்டியில் இராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர்மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

12வது அகில இந்திய குங்ஃபூ (கராத்தே) ஜூனியர்  ப்ஜூனியர் 6வயது முதல் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இடையிலானபோட்டி ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ஐந்துமாநில மாணவர்களுக்கு இடையே நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ,கர்நாடாகா, ஆந்திரா, மஹாராஷ்டிரா மற்றும்கேரளா மாணவர்கள் சுமார் 500பேர் போட்டியில் பங்கு பெற்றனர் .

இதில் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி மாணவி ஹாஸினி ஸ்ரீ தங்கப் பதக்கம் பெற்று முதல் பரிசையும் சான்றிதழையும் பெற்றார். பிரசாந், அகமதுஜலாலுதீன், முஹம்மது அனஸ் ஆகிய மூன்று மாணர்கள் வெள்ளி பதக்கம் பெற்று பரிசையும் சான்றிதழையும் பெற்றனர். மேலும் ஹர்ஸிதா, சரண்முஹம்மது அனஸ், அஃப்ரித், முஹம்மது யுஃப்ரீஸ், அபினவ்  ஆகிய 6 மாணவர்கள் வெண்கலப் பதக்கம் மற்றும்பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சிஅளித்த காரத்தே மாஸ்டர் ரென்சி R. குஹன் ஆகியோரை சதக் அறக்கட்டளை தலைவர் S.M.முஹம்மது யூசுஃப்,    செயலாளர்  S.M.H.ஷர்மிளா, பள்ளி முதல்வர் S.நந்தகோபால் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாரட்டினார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!