17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தின நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தின நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் March 1, 2019, 8:04 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 01/03/2019 மாலை 2.30 மணியளவில் உலக புத்தக தினம் மற்றும் பதிப்புரிமை தின நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியினை கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.தல்பியா பானு இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நூலகத் துறைத் தலைவர் Dr. V. கீதா தேவி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அத்துடன் கல்லூரி முதல்வர் Dr. A.R. நாதிரா பானு கமால் அவர்கள் உலக புத்தக தினம் ஏப்ரல் 23 கொண்டாடப் படுவதையும், மாணவிகள் அதிக திறமைகளை வளர்க்குமாறும், பாட பகுதியை தாண்டி பிற நூல்களையும் பயிலுமாறும் அறிவுரை வழங்கி மலாலாவை மேற்கோள் காட்டி தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் Mr. K.செந்தில் குமார் M.Sc, B.Ed, M.Phil., முதுகலை கணினி அறிவியல் ஆசிரியர், அலங்கானூர், இராமநாதபுர மாவட்டம். அவர்களுக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

அத்துடன் நூலின் சிறப்பையும், நூல்கள் பயில்வதன் நன்மைகளையும் இலக்கிய நயத்துடனும், கவிநயத்துடனும் எடுத்துரைத்தார், புத்தகத்தை தனது உயிராக நினைத்த பல அறிஞர்களை எடுத்துக்காட்டி மாணவிகளை புத்தகம் பயில ஊக்குவித்தார். மேலும், தாய்,தந்தை, ஆசிரியர் சிறப்பை தனது கவி நயம் சொட்ட எடுத்துரைத்து “தொட்டு பார்த்தால் காகிதம், தொடர்ந்து படித்தால் ஆயுதம் என்றும் நீ கற்காமல் இருப்பதை விட பிறக்காமல் இருப்பதை சிறந்தது” எனக்கூறி சிறப்புரையாற்றினார். இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி P.முரளீஸ்வரி நன்றியுரை நல்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!