17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » மாவட்ட செய்திகள் » மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

மாவட்ட வருவாய் துறை அலுவலர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

எழுதியவர்: keelai March 12, 2017, 1:33 pm

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா இன்று 12.03.17 காலை 11 மணியளவில் இராமநாதபுரம் ஜனார்தன் மாளிகையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் கீழக்கரை தாலுகா சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தமீம் ராசா இரண்டாவது முறையாக மாவட்ட செயலாளராக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமான கீழக்கரை சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள்  கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் தாசில்தார் தமீம் ராசாவுக்கும், அவருடன் பொறுப்பேற்றிருக்கும் அனைத்து சங்க நிர்வாகிகளுக்கும் கீழை நியூஸ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!