17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர் இருவர் கைது..

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர் இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 10:41 pm

இலங்கை தலைமன்னாரில் இருந்து (ஆப்ரா 3584 எம் என்ஆர்) என்ற பதிவெண் கொண்ட படகில் இலங்கை மீனவர் இருவர் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். காரைக்காலில் இருந்து 24 நாட்டிக்கல் மைல் தூரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோக் காவல் படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்தாக வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் மீன்பிடி படகில் இன்ஜின் பழுதால் இந்திய கடல் எல்லைக்குள் வந்தாக தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காரைகால் துறைமுகம் அழைத்து சென்றனர். பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பின்னர் தமிழக கடலோர ( மெரைன்) போலீசாரிடம் ஒப்படைக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!