18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலகுண்டு அருகே மோட்டார் சைக்கிளிலில் துக்கம் விசாரிக்க சென்ற மூவர் பலி..

வத்தலகுண்டு அருகே மோட்டார் சைக்கிளிலில் துக்கம் விசாரிக்க சென்ற மூவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 7:07 pm

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சித்தரேவு உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் இறந்ததை துக்கம் விசாரிக்க தேனி மாவட்டம் வருசநாடு அருகே  வீரசின்னம்மாள்புரத்தைச் சேர்ந்த  கூலித் தொழிலாளிகள் காயக்கொடியான் வயது 40, சின்னபாண்டி வயது 38 ஆகிய இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

பின்னர் துக்கம் விசாரித்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்த பொழுது  சித்தரேவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சேது வயது 35 மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு செல்லப்பட்டது.

பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ராமலெட்சுமி இது தொடர்பாக வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!