17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்..

தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 6:24 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியம் தனுஷ்கோடி நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியை ஜே.ஜேம்ஸ் ஜெய செல்வி தலைமை வகித்தார். தேசிய அறிவியல் தினம், இன்றைய கால கட்டத்தில் அறிவியல் வளர்ச்சி முக்கியத்துவம் குறித்து கணிதம் ஆசிரியர் வி.சகாய ராஜன் பேசினார்.

சர்.சி.வி ராமன் விளைவு பற்றி  அறிவியல் ஆசிரியர் ச. ஷாம்லி விரிவுரை ஆற்றினார். அறிவியல் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், நோபல் பரிசின் முக்கியத்துவம் குறித்து இடைநிலை ஆசிரியை ஏ.ஆரோக்கிய வாலண்டினா மேரி விளக்கினார். அறிவியல் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இடைநிலை ஆசிரியர் மு.சசிகுமார் தொகுத்து வழங்கினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!