17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » வத்தலக்குண்டுவில் காவல்நிலைய சோதனைசாவடியை திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்….

வத்தலக்குண்டுவில் காவல்நிலைய சோதனைசாவடியை திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்….

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 6:05 pm

வத்தலக்குண்டுவில் காவல்நிலைய சோதனைசாவடியை திண்டுக்கல் காவல்துறை கண்காணிப்பாளர் திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் மின்வாரிய துணை மின்நிலையம் முன்பு வத்தலக்குண்டு காவல்நிலைய சோதனைச்சாவடிக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்ட புதிய சோதனை சாவடி கட்டிட திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு நிலக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாலகுமரன் தலைமை வகித்தார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் முருகன் முன்னிலை வகித்தார். புதிய கட்டிடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேல் திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து சோதனைசாவடியைச் சுற்றி பசுமை வதிலை இயக்கம் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் மரக்கன்றுகளை நட்டார். விழாவில் சப்இன்ஸ்பெக்டர் விஜய், பசுமை வதிலை இயக்கம் தலைவர் மருதராஜன், துணைதலைவர் தங்கராஜ், அமைப்பாளர் பாலு ஆலோசகர் ராஜாமுகமது உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!