17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » கீழக்கரையில் முதன் முறையாக மாணவர்களுக்கான பிரத்யேக புத்தக கண்காட்சி ..

கீழக்கரையில் முதன் முறையாக மாணவர்களுக்கான பிரத்யேக புத்தக கண்காட்சி ..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 4:57 pm

இன்றைய நவீன உலகில் டிஜிட்டல் புத்தகம், இணைய வழி படிப்பு என பல வகைகள் வந்தாலும் அச்சடிக்கப்பட்ட புத்தகத்தை படிக்கும் திருப்தி எதிலும் கிடைக்காது.  “கற்றது கையளவு..கல்லாதது உலகளவு” என்ற பழமொழி கற்றலின் அவசியத்தை உணர்த்தும்.  அதே போல் சமீபத்தில் நோபல் பரிசு வென்ற யூசுஃப் மலாலா கூறுகையில் “ஒரு குழந்தை, ஓரு ஆசிரியை, ஒரு புத்தகம், ஒரு பேனா.. இந்த உலகத்தையே மாற்றிவிடும்” என்கிறார்.

வாசித்தலின் முக்கியத்துவம் கருதி கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் மற்றும் இராமநாதபுரம் அருணா புத்தக நிலையம் இணைந்து  வரும் மார்ச் 02 மற்றும் 03ம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) இஸ்லாமியா மேன்நிலை பள்ளி வளாகத்தில் மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது.  அக்கண்காட்சி சிறப்பு சலுகையாக 15% தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.  புத்தக கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!