17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருவாடானை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 7 பேர் மீது வழக்கு..

திருவாடானை அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு 7 பேர் மீது வழக்கு..

எழுதியவர்: ஆசிரியர் February 28, 2019, 12:09 pm

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே இளங் குன்றம் கிராமத்தில் பாண்டி முனீஸ்வரர் கோயில் விழாவை முன்னிட்டு நேற்று (27.02.19) மாலை 4 மணி அளவில் மஞ்சு விரட்டு நடந்தது. அப்போது அங்கு ரோந்து சென்ற திருவாடானை சார்பு ஆய்வாளர் செல்லமுத்து இது குறித்து விசாரித்தார். அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக இளங் குன்றம் கிராமத்தைச் சேர்ந்த காசி, மகாலிங்கம், குமார், ராஜா, இன்னாசி, ராஜேந்திரன், பொன்னையா ஆகியோர் மீது சார்பு ஆய்வாளர் செல்லமுத்து வழக்கு பதிந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!