17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே வெட்டிக் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 6:48 pm

முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த சிலருக்கும், மருதம் நகரைச் சேர்ந்த ராஜா என்ற இளைஞருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாணவன் ராஜா நேற்று மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். அவரது உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக 6 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பதற்றம் நிலவும் சூழலில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடலை வாங்க மறுக்கும் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!