17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கல்வி » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

எழுதியவர்: ஆசிரியர் March 11, 2017, 9:37 pm

இந்தியாவில் பிப்ரவரி 1928ம் ஆண்டு 28ம் தேதி சி.வி.ராமன் கண்டுபிடிப்பை போற்றும் வண்ணம் அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு வருடமும் முன்னனி பள்ளிகள் மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல அறிவியல் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்குவார்கள்.

அத்தினத்தை கொண்டாடும் விதமாக கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு 3 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வடிவமைத்த மாதிரி அறிவியல் படைப்புகள் பொது மக்கள் பார்வைக்காக இன்று வைக்கப்பட்டது. அறிவியல் கண்காட்சி விழாவை இஸ்லாமியா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம் எம் கே முகைதீன் இப்ராஹிம் துவங்கி வைத்தார், துணை தாளாளர் எம் எம் கே ஜமால் இப்ராகிம் முன்னிலை வகித்தார், சிறப்பு பார்வையாளாக தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்து இப்ராஹிம் மற்றும் கீழக்கரை மக்தூமிய்யா உயர்நிலைப்பள்ளி தாளாளர் இப்திகார் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினர்.

இந்தக் கண்காட்சியை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி முதல்வர் மேபெல் ஜூஸ்ட்ஸ் மற்றும் சக ஆசிரிய ஆசிரியைகள் மிகச் சிறப்பாக மாணவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் சிறந்த அறிவியல் படைப்புகள் படைத்த மாணவர்களின் திறமையை அங்கீகரிக்கும் வண்ணம் பரிசுகள் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!