18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி சந்தைப்பட்டி பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை..

உசிலம்பட்டி சந்தைப்பட்டி பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளை..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 11:43 am

உசிலம்பட்டி அருகே சந்தைப்பட்டியில் உள்ள பொட்டல்மலை அடிவாரத்தில் சட்ட விரோதமாக செம்மண் திருடும் கும்பலை அதிகாரிகள் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி பஞ்சாயத்திற்குட்பட்ட சந்தைப்பட்டி கிராமத்தில் உள்ள பொட்டல் மலை அடிவாரத்தில் செம்மண்கள் அதிகம் உள்ளது. இதையறிந்த மணல் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பட்ட பகலிலேயே சட்டத்திற்கு விரோதமாக ஜேசிபி மூலம் செம்மண்களை திருடிச்சென்று 1 டிராக்டர் 3000த்திற்கும், 1 டிப்பர் லாரி 7000த்திற்கும் விற்பனை செய்து வருகின்றனர். செம்மண் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆசை தீரும் வரை பள்ளம் தோண்டி செம்மண்களை திருடுகின்றனர். இதனால் நிலம்வளம் பெரிதும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இது போன்று சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மணல் கடுத்துவபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், மணல் கடத்தலை தடுக்ககோரியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருட்டுத்தனமாக கண்மாயில் வண்டல் திருடும் போது மண்சரிந்து இளைஞன் பலியானது குறிப்பிடத்தக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!