17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » மாவட்ட செய்திகள் » கீழக்கரை செய்திகள் » சந்திப்பு » தங்கச்சிமடம் மீனவ மக்களின் நீதிக்கான போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆதரவு

தங்கச்சிமடம் மீனவ மக்களின் நீதிக்கான போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆதரவு

எழுதியவர்: keelai March 11, 2017, 11:58 pm

இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்த 22 வயது இளைஞர் பிரிட்சோ இலங்கை கடற் படையினரால் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்தும், அந்த இளைஞரின் படுகொலைக்கு நியாயம் கேட்டும் தங்கச்சி மடத்தில் இன்று 11.03.17 ஐந்தாவது நாளாக தொடரும் மீனவ மக்களின் நீதிக்கான போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார்.

முன்னதாக நேற்று முன் தினம் இலங்கை கடல்படையினரால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றுமொரு மீனவரை சந்தித்து ஆறுதல் கூறிய மமக மாநில அமைப்புச்செயலாளர் மதுரை கவுஸ் பாட்சா, மமக தலைமை நிலையச்செயலாளர் ஹீசைன் கனி அவர்கள் மற்றும் தமுமுக தென்கிழக்கு தேர்தல் அதிகாரி வாணி சித்திக் ஆகியோர் போராட்ட களத்திற்கு நேரில் சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் இராமநாதபுரம் கிழக்கு பெறுப்புக்குழு தலைவர் சாதிக் பாட்சா, உறுப்பினர்கள் தங்கச்சிமடம் ஆசிக், யாசர் அரபாத் மற்றும் இராமநாதபுரம் மேற்கு தமுமுக மாவட்ட செயலாளர் பாகீர் அலி மற்றும் மீனவ சமுதாய தலைவர்கள், கட்சியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!