18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை- மங்களூரு இடையே விரைவு ரயில் தடம் புரண்டது ..ரயில் சேவை பாதிப்பு..

சென்னை- மங்களூரு இடையே விரைவு ரயில் தடம் புரண்டது ..ரயில் சேவை பாதிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் February 26, 2019, 9:49 am

சென்னை- மங்களூரு இடையே தினமும் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்நிலையில் மங்களூரில் இருந்து நேற்று கிளம்பி சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த இந்த ரயில், கேரள மாநிலம் சோரனூர் அருகே வந்து கொண்டிருந்த போது, ரயில் நிலையத்தில் நுழைந்த போது, ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டது.

இந்த விபத்தால் ஏற்பட்ட காயம் குறித்து இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த விபத்து குறித்து தகவலறிந்த ரயில்வே உயரதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

அங்கு நடந்த விபத்தினால், சோரனூர்-கோழிக்கோடு இடையேயான ரயில் தடத்தில் சிறிது நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. இதனை உடனடியாக சீர் செய்யும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

செய்தி வி. காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!