17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » காயல்பட்டிணம் “துளிர்” சிறப்புக்குழந்தைகளுக்கான பள்ளியின் 18வது ஆண்டு விளையாட்டுப் போட்டி …

காயல்பட்டிணம் “துளிர்” சிறப்புக்குழந்தைகளுக்கான பள்ளியின் 18வது ஆண்டு விளையாட்டுப் போட்டி …

எழுதியவர்: ஆசிரியர் February 24, 2019, 9:18 pm

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டிணத்தில் உள்ள சிறப்புக்குழந்தைகளுக்கான துளிர் பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் 18வது ஆண்டுக்கான விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் (23.02.2019) மாலை நடை பெற்றது நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டஎஸ்பி., முரளி ரம்பா, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, சிறப்பு  குழந்தைகளை ஊக்குவித்து சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் பேசிய அவர் “நான் எத்தனையோ பள்ளிக்கூடம், கல்லூரிகள் விளையாட்டு விழா போன்ற பல்வேறு விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். அதைவிட இங்கு கலந்து கொண்டு சிறப்புக்குழந்தைகளை பார்த்தது எனக்கு சந்தோஷமாக உள்ளது. சிறப்புக் குழந்தைகளை பெற்றோர்களே, அவர்கள் குழந்தைகள் என்று கூட பாராமல் ஆதரிக்காமல் விட்டு விடும் சூழ்நிலை நமது சமூகத்தில் உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் சிறப்பு  குழந்தைகளுக்கென பள்ளிக்கூடம் ஆரம்பித்து நடத்துவது மற்றும் அவர்களை அன்பாக வழிநடத்தும் ஆசிரியர்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். சிறப்புக் குழந்தைகளுக்கு விளையாட்டுப்போட்டி நடத்துவதும் மிகவும் பாராட்டுக்குரியது.

இந்த விளையாட்டுப்போட்டி அவர்களது சிந்தனைகளை வெளிப்படுத்தி, இதிலிருந்து அவர்களுக்கு நிவாரணம் பெற வாய்ப்புள்ளது. எல்லோருக்கும் ஒவ்வொரு குறைகள் இருக்கத்தான் செய்யும், அது வெளியே தெரிவதில்லை. சிறப்புக்குழந்தைகளை பார்க்கும்போதே, அவர்களின் குறைகள் வெளியே தெரியும், ஆகவே நாம் அவர்களை உதாசீனப்படுத்தக்கூடாது, அவர்களுடன் சந்தோஷமாக பழக வேண்டும்” என்றார்

மேலும் பள்ளியில் உள்ள அனைத்து சிறப்புக்குழந்தைகளுக்கும் அவரது வாழத்துக்களை தெரிவித்ததோடு, இந்த சிறப்புக்குழந்தைகளுக்காக ஏதாவது உதவிகள் தேவைப்பட்டால் காவல்துறை சார்பாக என்னால் இயன்றளவு செய்ய முடியும் என்றும் கூறினார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற சிறப்புக்குழந்தைகள் அனைவருக்கும் பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தீர்த்தோஸ், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாரத், ஆறுமுகனேரி இன்ஸ்பெக்டர் பவுன் பத்திரகாளி, பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சித்திக் ரம்சான், அகமது ரஹ்மான், மற்றும் பள்ளி ஆசிரியைகள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!