17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலம்பு விரைவு ரயில் வாரம் மும்முறை இயக்க முடிவு….

சிலம்பு விரைவு ரயில் வாரம் மும்முறை இயக்க முடிவு….

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 7:16 pm

வண்டி எண் 16181/16182 சென்னை எழும்பூர் – செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் இரு முறை சேவை சிலம்பு விரைவு ரயில் 25.02.2019 முதல் வாரம் மூன்று முறை சேவை ரயிலாக இயக்கப்பட இருக்கிறது. வண்டி எண் 16181 சென்னை எழும்பூர் -செங்கோட்டை வாரம் மும்முறை சிலம்பு விரைவு ரயில் திங்கள், புதன், மற்றும் சனிக்கிழமைகளில் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். அதேபோல் வண்டி எண் 16182 செங்கோட்டை – சென்னை எழும்பூர் வாரம் மும்முறை சிலம்பு விரைவு ரயில் செவ்வாய், வியாழன மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இயக்கப்படும்.

இந்த வாரம் மும்முறை சேவை ரயிலின் முதல் சேவை திங்கட்கிழமை (25.02.2019) முதல் சென்னை எழும்பூரிலிருந்து துவங்கும். செங்கோட்டையிலிருந்து முதல் சேவை (26.02.2019) முதல் துவங்கும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!