18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருசக்கர வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி..

இருசக்கர வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 6:58 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள ஆவாரம்பட்டியைச் சேர்ந்தவர் நல்ல மகன் மாயி இவர் ஆவாரம்பட்டி கிராம பஞ்சாயத்தில் தண்ணீர் திறந்துவிடும் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் தனது இருசக்கர வாகனத்தில் நிலக்கோட்டை சென்றுவிட்டு மீண்டும் ஆவாரம்பட்டி திரும்பி வரும் போது சிலுக்குவார்பட்டி அருகே எதிரே வந்த தனியார் பேருந்தும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாயி படுகாயம் அடைந்தார். இதையடுத்து உடனடியாக அங்கு இருந்தவர்கள் 108 வாகனத்திற்கு தகவல் தெரிவித்து அவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் மாயி உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு வந்த நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!