17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலை பறிமுதல்: இருவர் கைது..

இலங்கைக்கு கடத்த இருந்த ஒரு டன் பீடி இலை பறிமுதல்: இருவர் கைது..

எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 2:51 pm

இலங்கைக்கு பீடி இலைகள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக ராமேஸ்வரம் சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சங்குமால் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரைபயில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த தூத்துக்குடி கார்த்திக், வேல்முருகன் ஆகியோரை சோதனை செய்த போது அவர்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக ஒரு டன் பீடி இலைகள் வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து பீடி இலைகளை பறிமுதல் செய்தனர்.

இருவரையும் கைது செய்து விசாரணை செய்ததில் முக்கிய குற்றவாளி தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரை பிடிக்க சுங்கத்துறை அதிகாரிகள் தூத்துக்குடி விரைந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!