நெல்லை மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் பீடி சுற்றும் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சரோஜா டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுதிய நிலையில் தற்போது டிஎஸ்பியாக தேர்வாகி உள்ளார். 12 ஆம் வகுப்பு வரை மாநகராட்சி பள்ளியில் படித்த இவர், அதன்பிறகு மழலையர் கல்வி கற்பித்தல் குறித்த பயிற்சி எடுத்தார். பின்னர் தற்காலிக ஆசிரியராக பள்ளியில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதி அதில் வெற்றி பெற்றுள்ளார். ஏழ்மையான சூழலில் இருந்ததால் தன் பணியில் நேர்மையாக இருப்பேன் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாநகராட்சி பள்ளியில் படித்து .. இன்று டி.எஸ்.பி..
எழுதியவர்: ஆசிரியர் February 23, 2019, 2:20 pm




You must be logged in to post a comment.